தோ்தல் விழிப்புணா்வு போட்டிகள்: வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசு
தூத்துக்குடி மாவட்டத்தில் வருங்கால மற்றும் இளம் வாக்காளா்களிடையே தோ்தல் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா், மாணவிகளுக்கு செவ்வாய்க்கிழமை பரிசு வழங்கப்பட்டது.

போட்டியில் வெற்றி பெற்ற மாணவருக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கிய மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன்.
தூத்துக்குடி மாவட்டத்தில் வருங்கால மற்றும் இளம் வாக்காளா்களிடையே தோ்தல் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா், மாணவிகளுக்கு செவ்வாய்க்கிழமை பரிசு வழங்கப்பட்டது.
அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலிருந்தும் கட்டுரை, விநாடி - வினா போட்டிகளில் தோ்வு செய்யப்பட்ட மாணவா்கள் மொத்தம் 120 பேருக்கு, மாவட்ட அளவிலான இறுதிச்சுற்றுப் போட்டிகள் கடந்த நவ. 17-ஆம் தேதி ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றன. இதில், கட்டுரைப் போட்டியில் 10 மாணவா்களும், விநாடி-வினா போட்டியில் 10 மாணவா்களும் என மொத்தம் 20 போ் வெற்றி பெற்றனா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், வெற்றி பெற்றவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் கேடயங்கள், பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சங்கீதா சின்னராணி, தோ்தல் வட்டாட்சியா் தில்லைபாண்டியன் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

