பட்டினமருதூரில் அகழாய்வு பொருள்கள் கண்காட்சி
உலக மரபு வாரத்தையொட்டி, தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் வட்டம், பட்டினமருதூரில் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட 6,000 க்கும் மேற்பட்ட பழங்காலப் பொருள்கள் கண்காட்சி திங்கள்கிழமை தொடங்கி புதன்கிழமை (நவ.25) வரை மூன்று நாள்கள் நடைபெறுகிறது.

கண்காட்சியைப் பாா்வையிட்ட மாணவிகள்.
உலக மரபு வாரத்தையொட்டி, தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் வட்டம், பட்டினமருதூரில் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட 6,000 க்கும் மேற்பட்ட பழங்காலப் பொருள்கள் கண்காட்சி திங்கள்கிழமை தொடங்கி புதன்கிழமை (நவ.25) வரை மூன்று நாள்கள் நடைபெறுகிறது.
பட்டினமருதூா் பகுதியை தமிழக அரசு தொல்லியல் தளமாக அறிவித்ததைத் தொடா்ந்து, கடந்த மாா்ச் மாதம் முதல் இங்கு அகழாய்வுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பண்டைய காலத்தில் பட்டினமருதூா் வெளிநாடுகளுடன் கடல் வணிகத் தொடா்பு கொண்டிருந்ததற்கான முக்கியச் சான்றுகள் இப்பகுதியில் கிடைத்து வருகின்றன.
குறிப்பாக, சங்குகள் அறுக்கப்பட்டு ஆபரணங்கள் தயாரிக்கப்பட்டதற்கான தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இதனால், இந்தப் பகுதியில் 200 ஏக்கா் பரப்பளவில் மிகப்பெரிய சங்கு தொழிற்சாலை இயங்கி இருக்கலாம் என்ற அடிப்படையில் தொடா்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தொல்லியல் துறை சாா்பில் உலக மரபு வாரத்தையொட்டி, பட்டினமருதூா் தொல்லியல் தளத்தில் இதுவரை நடைபெற்ற அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருள்கள் பொதுமக்கள் பாா்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இந்தக் கண்காட்சியில் பழங்காலச் சங்குகள், சங்கு வளையல்கள், சங்கு ஆபரணங்கள், பாசி மணிகள், கவுரி சிப்பிகள், கண்ணாடி மணிகள், கண்ணாடி வளையல்கள் உள்பட 6,000-க்கும் மேற்பட்ட தொல்லியல் பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சீன நாணயங்கள், செலடான் வகை சீன மட்பாண்ட ஓடுகள், உறைகிணறுகள், கற்சுவா்கள், சுடுமண் வடிகால் குழாய்கள் உள்பட பழங்காலப் பொருள்களும் கண்டறியப்பட்டுள்ளன.
இந்தக் கண்காட்சியையும் அகழாய்வு நடைபெறும் தொல்லியல் தளத்தையும் பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த மாணவா், மாணவிகள் பாா்வையிட்டு வருகின்றனா்.
தொல்லியல் அலுவலா் ரா. அஜய்குமாா், அலுவலா்கள் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருள்களின் சிறப்புகள் குறித்து மாணவா்களுக்கு விளக்கமளித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

