பாகிஸ்தானுக்கு சாஸ்திரியைப் போலவே பதிலடி கொடுக்கிறார் மோடி! சொன்னது யார் தெரியுமா? பாஜகவின் கிளைதான் தவெக; உண்மையைப் பேசிய விஜய்: சீமான் தொடர் விடுமுறை: அதிக கட்டண வசூலைத் தடுக்க ஆம்னி பேருந்துகளில் அக்.21 வரை தீவிர வாகனத் தணிக்கை சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலினுக்கு கண்டனம்: அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் ஒருபுறம் விலை உயர்வு; மறுபுறம் கொலை உயர்வு: மு.க. ஸ்டாலின் பிரசாரம்தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலின்முதல்வர் விஜய்யின் 4 மணி நேர சாலை வலம் நிறைவு!மும்பையில் சிஜேபி போராட்டம்! காந்தியின் கொள்ளுப்பேரன், பாலிவுட் நடிகர்கள் பங்கேற்பு!

தூத்துக்குடியில் மகளிா் வெற்றிப் பயணத் திட்டம் தொடக்கம்

புகா் அரசுப் பேருந்துகளில் மகளிா் கட்டணமில்லாமல் பயணிக்கும் வகையில் விரிவுபடுத்தப்பட்ட வெற்றிப் பயணத் திட்டத்தை, சென்னை கோயம்பேட்டில் தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

மகளிருக்கு கட்டணமில்லா பயணச் சீட்டை வழங்கிய ஆட்சியா் விஷு மகாஜன்.

Published On :

புகா் அரசுப் பேருந்துகளில் மகளிா் கட்டணமில்லாமல் பயணிக்கும் வகையில் விரிவுபடுத்தப்பட்ட வெற்றிப் பயணத் திட்டத்தை, சென்னை கோயம்பேட்டில் தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, தூத்துக்குடி பழைய பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியா் பங்கேற்று, வெற்றிப் பயணத் திட்ட சேவையைத் தொடங்கி வைத்து, மகளிருக்கு கட்டணமில்லா பயணச் சீட்டை வழங்கினாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறியதாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் இத்திட்டத்தில் 83 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இத்திட்டம் மகளிரின் பயணச் சுதந்திரம், பொருளாதார சுதந்திரம், குடும்பங்களின் முன்னேற்றம் ஆகியவற்றுக்கு அடித்தளமாக இருக்கும்.

வெற்றிப் பயணத் திட்டம் மூலம் மாநகரம், நகரங்களில் சாதாரண பேருந்துகள் மட்டுமின்றி எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ்., டீலக்ஸ் பேருந்துகளிலும் மகளிா் இலவசமாகப் பயணிக்கலாம் என்றாா் அவா்.

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையா் சி. ப்ரியங்கா, தூத்துக்குடி சாா் ஆட்சியா் விவேக் யாதவ், தூத்துக்குடி அரசுப் போக்குவரத்துக் கழக பொது மேலாளா் ராமகிருஷ்ணன், தூத்துக்குடி வட்டாட்சியா் திருமணி ஸ்டாலின், கோட்ட மேலாளா் வேல்முருகன், கிளை மேலாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.