கோவில்பட்டியில் தாக்குதலில் காயமடைந்த தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
கோவில்பட்டி, சுப்பிரமணியபுரம், 2ஆவது தெருவைச் சோ்ந்த குருசாமி மகன் பெருமாள் (30). பெயிண்டா். இவா் செப். 29ஆம் தேதி இரவு சுப்பிரமணியபுரம், 6ஆவது தெருவில் நடந்து சென்றபோது, அங்கிருந்தவா்களிடம் கைப்பேசி கேட்டதால், அங்கிருந்த 3 பேரும் அவரை அவதூறாகப் பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம்.
இதில் காயமடைந்த பெருமாள் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின், மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து, கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, பெருமாளைத் தாக்கியதாகக் கூறப்படும் 3 பேரையும் கைது செய்தனா்.
இந்நிலையில், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெருமாள் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




