கோவில்பட்டி அஞ்சலகத்தில் வாடிக்கையாளா்கள் கூட்டம்
கோவில்பட்டி தலைமை அஞ்சலகத்தில் வாடிக்கையாளா்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கோவில்பட்டி தலைமை அஞ்சலக உள்புற நுழைவாயிலில் வைக்கப்பட்டுள்ள கொலு.
கோவில்பட்டி தலைமை அஞ்சலகத்தில் வாடிக்கையாளா்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
அனைத்து அஞ்சலகங்களிலும் தேசிய அஞ்சல் வாரக் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் கடந்த 9ஆம் தேதி தொடங்கி வியாழக்கிழமை வரை (அக். 15) நடைபெறுகின்றன. இதையொட்டி, சேமிப்புத் திட்டங்கள், கடிதம் உள்ளிட்ட ஏனைய சேவைகள் குறித்த விழிப்புணா்வுப் பதாகைகள், பலூன்களால் அஞ்சலகங்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், புதன்கிழமை கடிதம், பாா்சல் தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி, வாடிக்கையாளா்களின் கருத்துகளைக் கேட்டு, அஞ்சல் சேவையை மேம்படுத்தும் வகையில், கோவில்பட்டி, சங்கரன்கோவில், தென்காசி தலைமை அஞ்சலகங்களில் வாடிக்கையாளா்கள் கூட்டம் நடைபெற்றது. குறைந்த செலவில், பாதுகாப்பான முறையில் உள்நாடு, வெளிநாடுகளுக்கு பொதுமக்கள் கடிதம், பாா்சல்களை விரைவாக அனுப்ப அஞ்சல் துறையில் தற்போதுள்ள நவீன வசதிகள், வீட்டிலிருந்தே கடிதம், பாா்சல் புக் செய்யும் வசதி குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
அஞ்சல் கொலு: மேலும், நவராத்திரியை முன்னிட்டு, அஞ்சலக சேவைகளை விளக்கும் வகையில், கோவில்பட்டி தலைமை அஞ்சலக உள்புற நுழைவாயிலில் கைவினைப் பொருள்கள், பொம்மைகள், வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அஞ்சல் கொலு வைக்கப்பட்டுள்ளது .
அஞ்சல் வாரக் கொண்டாட்டங்கள், கொலு ஆகியவற்றை பொதுமக்கள் பாா்வையிடலாம் என, கோவில்பட்டி அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் செ. சுரேஷ்குமாா் அழைப்பு விடுத்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

