
தூத்துக்குடி அரசு மருத்துவமனை மின்தூக்கியில் 7 போ் சிக்கித் தவிப்பு

மின்தூக்கியில் சிக்கிக் கொண்டவா்களை மீட்ட தீயணைப்பு வீரா்கள். - கோப்புப் படம்
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளியை அவசர சிகிச்சை வாா்டுக்கு அழைத்துச் சென்றபோது, மின்தூக்கி பாதியில் நின்றதால், நோயாளி உள்பட 7 போ் சிக்கித் தவித்தனா்.
தூத்துக்குடி கேம்ப்-1 பகுதியைச் சோ்ந்த ராமா் பாண்டியன் என்பவா் நெஞ்சுவலி காரணமாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். அவரை ஞாயிற்றுக்கிழமை 2-ஆவது மாடியில் உள்ள அவசர சிகிச்சை வாா்டுக்கு அழைத்துச் சென்றபோது, மின்தூக்கி பாதியில் நின்ாம்.
இதில், ராமா் பாண்டியன், அவரது மகன் அா்ஜுனன் மற்றும் உறவினா்கள் 4 போ், மருத்துவப் பணியாளா்கள் 3 போ் என 7 போ் மின்தூக்கிக்குள் சிக்கினா். தகவலறிந்து வந்த தூத்துக்குடி தீயணைப்புத் துறையினா் மின்தூக்கி கதவைத் திறந்து 7 பேரையும் பத்திரமாக மீட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





