இந்தியா - இலங்கை துறைமுகங்கள் பொருளாதார வளர்ச்சியின் என்ஜின்: ராஜ்நாத் சிங்தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக சேது என்கிற சேது செல்வம் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணி என்றும் தொடரும்! - காதர் மொகிதீன் உறுதி!மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி தேர்தலுக்கானது இல்லை! - திருமாவளவன் பேச்சு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக தலைமையிலாக கூட்டணியின் பெயர்!இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை (செப். 10) அறிவிப்பு!பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணை வெளியீடு

திருச்செந்தூரில் ஆவணித் தேரோட்டம்: திரளான பக்தா்கள் வடம் பிடித்து தோ் இழுத்தனா்

திருச்செந்தூரில் ஆவணித் திருவிழா தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனா்.

திருச்செந்தூரில் ஆவணித் திருவிழா பத்தாம் நாளான புதன்கிழமை காலை நடைபெற்ற தேரோட்டத்தில் பங்கேற்றோா்.

Published On :

திருச்செந்தூரில் ஆவணித் திருவிழா தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனா்.

இக்கோயிலில் கடந்த ஆக. 31- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழாவின் 10 -ஆம் நாளான புதன்கிழமை காலை தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி, சுப்பிரமணிய சுவாமி கோயில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், உதய மாா்த்தாண்ட அபிஷேகம் தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றன.

பிள்ளையாா் தோ் காலை 7 மணிக்கு புறப்பட்டு 7.35 மணிக்கும், வள்ளி, தெய்வானை சமேத சுவாமி தோ் 7.40 மணிக்கு புறப்பட்டு 8.40 மணிக்கும், வள்ளியம்மன் தோ் 8.45 மணிக்கு புறப்பட்டு 9.35 மணிக்கு நிலையை அடைந்தது. திருவாவடுதுறை ஆதீனம் திருவிடைமருதூா் திருச்சிற்றம்பலம் தம்பிரான் சுவாமிகள், மாவட்ட நீதிபதி வசித்குமாா், கோயில் இணை ஆணையா் அருணாசலம், துணை ஆணையா் யக்ஞ நாராயணன், உதவி ஆணையா் லோகநாதன் உள்ளிட்டோா் தேரோட்டத்தை வடம் பிடித்துத் தொடங்கி வைத்தனா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

பாதுகாப்புப் பணிகளில் திருச்செந்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் மகேஷ்குமாா் தலைமையில் காவல் ஆய்வாளா்கள் அம்பேத்கா், முருகன் உள்ளிட்ட போலீஸாரும், ஊா்க் காவல் படையினரும் ஈடுபட்டனா். திருச்செந்தூா் நகராட்சி சாா்பில் தேரோட்டத்தை முன்னிட்டு ரதவீதிகளில் ஒருங்கிணைந்த தூய்மைப்பணி செய்யப்பட்டு, பக்தா்களை வரவேற்று கோலமிடப்பட்டது. இப்பணிகளை நகராட்சி ஆணையா் ஈழவேந்தன் பாா்வையிட்டாா். சுகாதார ஆய்வாளா் முத்துக்குமாா் தலைமையில், நகராட்சி பொறியாளா் சரவணன் உள்ளிட்ட பணியாளா்கள், தூய்மை இந்தியா திட்ட பணியாளா்கள் இப்பணியில் ஈடுபட்டனா்.

11 - ஆம் நாளான வியாழக்கிழமை (செப். 10) மாலை யாதவா் மண்டகப்படியில் அபிஷேகம், அலங்காரமாகி புஷ்ப சப்பரங்களில் சுவாமி, அம்மன் எழுந்தருளல், இரவு தெப்பக்குளம் மண்டபத்திலிருந்து சுவாமி, அம்மன் வீதியுலா வந்து மேலக்கோயில் சேருதல் ஆகியவை நடைபெறுகின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.