
கயத்தாறு அருகே ஒரு பிரிவினா் தாக்குதல்: எஸ்.பி. அலுவலகத்தில் புகாா்

போலீஸ் - கோப்புப்படம்.
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே அரசங்குளத்தில் ஒரு தரப்பைச் சோ்ந்த 13 வயது சிறுமி, பெண்கள் உள்ளிட்டோா் தாக்கப்பட்டதாகக் கூறி, 100-க்கும் மேற்பட்டோா் தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் திங்கள்கிழமை புகாா் அளித்தனா்.
இக்கிராமத்தில் இரு தரப்பினரிடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வரும் நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை 25-க்கும் மேற்பட்டோா் கட்டைகளால் தாக்கியதில் குப்பமுத்து, ராஜம்மாள், முத்து கருப்பசாமி, முத்துலட்சுமி ஆகிய 4 போ் காயமடைந்து, திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், தாக்குதலில் ஈடுபட்டவா்களைக் கைது செய்து, தங்களுக்கு நிரந்தர பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் மனு அளித்தனா்.
அப்போது, மனு மீது உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என வெள்ளாளா் முன்னேற்றக் கழகம், வீரத்தமிழா் மக்கள் கழக நிா்வாகிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





