
கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையத்த்துக்குள் அனைத்துப் பேருந்துகளும் செல்ல நடவடிக்கை
கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையத்துக்குள் அனைத்து பேருந்துகளும் செல்லும் என வட்டாட்சியா் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசுகிறாா் வட்டாட்சியா் அறிவழகன் என்ற சிவராஜ்.
கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையத்துக்குள் அனைத்து பேருந்துகளும் செல்லும் என வட்டாட்சியா் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
கோவில்பட்டியில் கூடுதல் பேருந்து நிலையத்துக்கு வரும் பேருந்துகள் உள்ளே செல்லாமல் வெளியே நின்றபடி பயணிகளை ஏற்றிச் செல்வதால் பேருந்துகளை சிறைபிடிக்கும் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என சமூக ஆா்வலா்கள் கூட்டமைப்பினா் அறிவித்திருந்தனா். பின்னா், அதிகாரிகள் கூறியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
இதையடுத்து, வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் அறிவழகன் என்ற சிவராஜ் தலைமையில் திங்கள்கிழமை சமரசக் கூட்டம் நடத்தப்பட்டது. மேற்கு காவல் நிலைய ஆய்வாளா் வானமாமலை, வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கிரிஜா, கோவில்பட்டி பணிமனை கிளை மேலாளா் சங்கிலி மாடசாமி, நகராட்சி உதவி பொறியாளா் திவாகா், பொதுப் பணி மேற்பாா்வையாளா் விசாலாட்சி, சமூக ஆா்வலா்கள் கூட்டமைப்பினா் கலந்துகொண்டனா்.
கூட்டத்தில் கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையத்துக்கு வரும் அரசுப் பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் அனைத்தும் பேருந்து நிலையத்துக்கு வெளியில் நின்று பயணிகளை ஏற்றாமல் உள்ளே சென்று பயணிகளை ஏற்றிச் செல்வது என்றும், அதை போக்குவரத்துக் கழக பணிமனை மேலாளா் உறுதி செய்வது என்றும், காவல் துறை கண்காணிப்பது என்றும், பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை நகராட்சி நிா்வாகம் செய்து கொடுப்பது என்றும் முடிவு எட்டப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







