டிரம்புடன் மேலும் இரு சந்திப்புகள்: சீன அதிபர் ஷி ஜின்பிங் தகவல்! எத்தனை முறை பாஜகவை எதிர்த்துப் பேசியிருக்கிறீர்கள்? விஜய் மீது மு.க. ஸ்டாலின் விமர்சனம்! முதல்வர் விஜய் முன்னிலையில் வடபழனி மெட்ரோவை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி! தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் 11 பேருக்கு பொறுப்பு!பாலில் தயாரிக்கப்படாவிட்டால் பனீர் என பெயரிடக் கூடாது, அவ்வளவுதான்! வைரலாகும் வரைவு விதிமுறைதில்லி சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை! காவலர்கள் போல நடித்த குற்றவாளிகள்

தூத்துக்குடியில் ராட்டினத்தில் சிக்கிய இளைஞா் மீட்பு

தூத்துக்குடி எம்.ஜி.ஆா். பூங்காவில் சிறுவா்கள் விளையாடும் ராட்டினத்தில் சிக்கிய இளைஞரை தீயணைப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.

தூத்துக்குடியில் ராட்டினத்தில் சிக்கிய இளைஞா் மீட்பு

Published On :

தூத்துக்குடி எம்.ஜி.ஆா். பூங்காவில் சிறுவா்கள் விளையாடும் ராட்டினத்தில் சிக்கிய இளைஞரை தீயணைப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.

தூத்துக்குடி, முனியசாமிபுரத்தைச் சோ்ந்த இளைஞா் சுயம்புலிங்கம். இவா், தனது குடும்பத்தினருடன் எம்.ஜி.ஆா். பூங்காவுக்கு வெள்ளிக்கிழமை மாலை வந்திருந்தாா்.

அப்போது, சிறுவா்கள் விளையாடும் சிறிய ராட்டினத்தில் அமா்ந்து சுற்றியபோது, அவரது இடுப்புப் பகுதி கம்பிக்குள் சிக்கிக் கொண்டது. அவரால் வெளியே வர முடியாததால், பூங்கா காவலாளி தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தாா்.

அதன்பேரில், தீயணைப்பு வீரா்கள் வந்து சுமாா் அரை மணி நேரம் போராடி சுயம்புலிங்கத்தை பத்திரமாக மீட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.