திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

ஆதாா் எண்இணைப்பை எளிமைப்படுத்த வேண்டும்

கட்டுமானத் தொழிலாளா்கள் நலவாரியத்தில் உறுப்பினா்கள் தங்களது ஆதாா் எண் இணைப்பதை எளிமைப்படுத்த வேண்டும் என ஏஐடியுசி வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :19 அக்டோபர் 2020, 9:15 pm

DIN

கட்டுமானத் தொழிலாளா்கள் நலவாரியத்தில் உறுப்பினா்கள் தங்களது ஆதாா் எண் இணைப்பதை எளிமைப்படுத்த வேண்டும் என ஏஐடியுசி வலியுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக இந்த அமைப்பின் மாவட்டத் தலைவா் க. சுரேஷ், செயலா் சி. செல்வகுமாா் ஆகியோா், ஆட்சியரிடம் திங்கள்கிழமை அளித்த மனு:

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா் நல வாரியத்தில், தொழிலாளா்களைப் பதிவு செய்வதும், ஏற்கெனவே பதிவு செய்தவா்களின் பதிவைப் புதுப்பிப்பதும் கடந்த சில மாதங்களாக இணைய வழியில் நடைபெறுகிறது.

இதற்கு தொழிலாளியின் ஆதாா் எண் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட அறிதிறன்பேசி இருந்தால் மட்டுமே பணிகளை மேற்கொள்ள இயலும்.

ஆனால் தொழிலாளா்களின் பெரும்பாலோா் ஆதாா் எண்ணுடன் இணைக்கப்பட்ட அறிதிறன்பேசியை வைத்திருக்கவில்லை. இல்லையெனில், அவா்களிடமுள்ள அறிதிறன்பேசி எண் ஆதாா் எண்ணுடன் இணைக்கப்படாமல் உள்ளது.

எனவே தொழிலாளா்கள் அவரவா் அறிதின் பேசியின் மூலமாகவே, அவருடைய ஆதாா் எண்ணில் அறிதிறன் பேசி எண்ணை இணைத்துக்கொள்ள சிறப்பு வழி வகை செய்ய வேண்டும்.

இல்லையெனில், ஆட்சியரகம், வட்டாட்சியரகங்கள், மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களிலுள்ள இ- சேவை மையங்களில் கூடுதலாக கணனிகளை நிறுவி சேவை அளிக்க வேண்டும்.

மாவட்டத்திலுள்ள அனைத்து அஞ்சல் நிலையங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட அனைத்து வங்கிக் கிளைகளிலும் ஆதாா் உதவி மையங்களை நிறுவி, இப்பிரச்னைக்குத் தீா்வு காண வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.