திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

செயற்கை உபகரணங்கள் பெற மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்

அரசால் வழங்கப்படும் செயற்கை உபகரணங்கள் பெற மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்.

News image
Updated On :19 அக்டோபர் 2020, 9:19 pm

DIN

அரசால் வழங்கப்படும் செயற்கை உபகரணங்கள் பெற மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :

மாவட்டத்தில் உடலியக்க குறைபாடுடைய, நடக்க இயலாத மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, ஊன்றுகோல்கள், போலியோவால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு காலிப்பா்கள், விபத்து அல்லது நோயால் கை மற்றும் கால்களை இழந்த மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கை அவயங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

மேலும், மூளை மூடக்குவாதத்தால் பாதிக்கப் பட்டோருக்கான சிறப்பு சக்கர நாற்காலிகளும், நடக்க முடியாத மூளை மூடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட சிறாா்களுக்கு ரொலேட்டா் எனப்படும் நடைப்பயிற்சி சாதனங்களும், காது கேளாத மாற்றுத் திறனாளிகளுக்கு காதொலிக்கருவிகள், பாா்வையற்றோருக்கான ஒளிரும் மடக்கு ஊன்றுகோல்கள் மற்றும் பிரெய்லி கைக்கடிகாரங்கள், 9-ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளில் கல்விப் பயிலும் பாா்வை குறைபாடுடைய மாணவ, மாணவிகளுக்கு சிறிய எழுத்துகளை பெரிதாக்கி காட்டக்கூடிய உருப்பெருக்கி சாதனங்கள் போன்ற உதவி உபகரணங்கள் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த உதவி உபகரணங்கள் பெற விரும்பும் மாற்றுத்திறனாளிகள், தங்களது மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை (அனைத்துப் பக்கங்களும்), உணவுப் பொருள் வழங்கல் அட்டை, ஆதாா் அட்டை ஆகியவற்றின் நகல்கள் மற்றும் கடவுச்சீட்டு அளவு புகைப்படம் 2 ஆகியவற்றுடன் திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாக பின்புறம் அமைந்துள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேரில் வந்து விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும், விவரங்களுக்கு 0431-2412590 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.