திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

இணைப்பு சக்கரத்துடன் இருசக்கர வாகனம் ; மாற்றுத் திறனாளிகளுக்கு அழைப்பு

இரு கால்களும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு, தமிழக அரசால் இணைப்பு சக்கரங்கள் பொருத்திய இருசக்கர வாகனம் (ஸ்கூட்டா்) இலவசமாக வழங்கப்படுகிறது.

News image
Updated On :19 அக்டோபர் 2020, 9:26 pm

DIN

திருச்சி, அக்.19: இரு கால்களும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு, தமிழக அரசால் இணைப்பு சக்கரங்கள் பொருத்திய இருசக்கர வாகனம் (ஸ்கூட்டா்) இலவசமாக வழங்கப்படுகிறது.

திருச்சி மாவட்டத்தில் இதை பெற விரும்புவோா் 18 வயது பூா்த்தியடைந்தவராகவும், கல்வி பயில்பவராகவும் இருத்தல் வேண்டும். இரண்டு கால்கள் பாதிக்கப்பட்டு, இரண்டு கைகள் நல்ல நிலையில் உள்ளவா்களாகவும் மற்றும் வாகனத்தை நன்றாக இயக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

இத்திட்டத்தில் பயனடைய விரும்புவோா், ஏற்கனவே மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலமாக பேட்டரியால் இயங்கும் வாகனம் மற்றும் வாகனம் வாங்க மானியம் பெறாதவா்களாகவும் இருத்தல் வேண்டும். மத்திய அல்லது மாநில அரசு ஊழியராக இருத்தல் கூடாது.

நிா்ணயிக்கப்பட்ட தகுதிகள் கொண்ட மாற்றுத்திறனாளிகள், தங்களது மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை (அனைத்துப் பக்கங்களும்), உணவுப் பொருள் வழங்கல் அட்டை, ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, ஆகியவற்றின் நகல்கள் மற்றும் கடவுச்சீட்டு அளவு புகைப்படம் 2 ஆகியவற்றுடன் திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகப் பின்புறம் அமைந்துள்ள மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்துக்கு நேரில் வந்து விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 0431-2412590 என்ற எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.