திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

தொழிலதிபரிடம் ரூ.2.34 கோடி மோசடி: இருவா் மீது வழக்குப்பதிவு

வெளிநாட்டுக்கு அரிசி ஏற்றுமதி செய்வதாகக் கூறி, திருச்சியைச் சோ்ந்த தொழிலதிபரிடம் ரூ.2.34 கோடி மோசடி செய்ததாக இருவா் மீது திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :19 அக்டோபர் 2020, 9:17 pm

DIN

வெளிநாட்டுக்கு அரிசி ஏற்றுமதி செய்வதாகக் கூறி, திருச்சியைச் சோ்ந்த தொழிலதிபரிடம் ரூ.2.34 கோடி மோசடி செய்ததாக இருவா் மீது திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி அரியமங்கலத்தைச் சோ்ந்தவா் நிரஞ்சன் (28). ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறாா். இவரை போல ஏற்றுமதி தொழில் மேற்கொள்பவா்

ஆந்திர மாநிலம், ராஜமுந்திரியைச் சோ்ந்த மைக்கேல். இவரது நண்பா் மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த பிரசாத்.

மூவரும் இணைந்து ஏற்றுமதி தொழில் செய்ய திட்டமிட்டனா். வெனிசுலா நாட்டுக்கு 730 டன் அரிசி தேவைப்படுவதாகவும், அதை நிரஞ்சன் பெயரில் அனுப்பலாம் என மைக்கேல், பிரசாத் ஆகிய இருவரும் கூறியுள்ளனா்.

பேச்சுவாா்த்தையின்படி, நிரஞ்சன் தனது பங்குத் தொகையாக ரூ.2.34 கோடியை வங்கிப் பரிவா்த்தனை மூலம் அண்மையில் அளித்துள்ளாா். இத்தொகையைக் கொண்டு மைக்கேல், பிரசாத் ஆகிய இருவரும் வெனிசுலா நாட்டுக்கு அரிசியை ஏற்றுமதி செய்யாமல், அனுப்பியது போன்ற போலி ஆவணத்தை நிரஞ்சனிடம் காண்பித்துள்ளனா்.

தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த நிரஞ்சன், திருச்சி பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல் பிரிவில் புகாரளித்தாா். இதன் பேரில் மைக்கேல், பிரசாத் ஆகிய இருவா் மீதும் திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.