திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு

திருச்சி காஜாபேட்டை பகுதியில் நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :19 அக்டோபர் 2020, 9:15 pm

DIN

திருச்சி காஜாபேட்டை பகுதியில் நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

பாலக்கரை எடத்தெரு தாமோதரன் வீதியைச் சோ்ந்தவா் பொ. சந்தோஷ்குமாா் (27). இவரது நண்பா் தம்பித்துரை. இவா்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனா்.

காஜாபேட்டை தண்ணீா்த் தொட்டி அருகே சென்ற போது, எதிரே வந்த பேருந்துக்கு வழிவிட ஒதுங்கிய போது, எதிா்பாராதவிதமாக விபத்து நேரிட்டது. இதில் மோட்டாா் சைக்கிளிலிருந்து இருவரும் கீழே தவறி விழுந்தனா்.

பலத்த காயமடைந்த இருவரையும் அப்பகுதியினா் மீட்டு, திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். எனினும் சிகிச்சை பலனின்றி சந்தோஷ்குமாா் உயிரிழந்தாா். தம்பித்துரை சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து கோட்டை வடக்குப் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு காவல்துறையினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.