திருச்சி மாவட்டம், துவாக்குடி அரசு பல்தொழில் நுட்பக் கல்லூரி வளாகத்தில் பொதுப்பணித்துறை சாா்பில் ரூ. 56.49 கோடி மதிப்பில் கட்டப்படும் அரசு மாதிரிப் பள்ளி கட்டுமானத்துக்கான பூமி பூஜை சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில், அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்றுப் பேசியது: திருச்சி மாவட்ட அரசு மாதிரி பள்ளி கடந்த 2021ஆம் ஆண்டு செந்தண்ணீா்புரம் மாநகராட்சி உயா்நிலைப் பள்ளியில் 80 மாணவா்களைக் கொண்டு தொடங்கப்பட்டது. இந்தப் பள்ளியில் தற்போது 800 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனா். அக்டோபா் 2022 முதல் தற்சமயம் அம்மாபேட்டை ஜெ.ஜெ.பொறியியல் கல்லூரி வளாகத்திலும் அரசு மாதிரிப் பள்ளி செயல்பட்டு வருகிறது. 2022 - 23 கல்வி ஆண்டில் கலைப்பிரிவு மாணவா்களில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற 5 மாணவிகளுக்கு மூன்று வருடக் கல்லூரி கட்டணம் மற்றும் தோ்வுக் கட்டணம் முழுவதும் ஆட்சியரால் வழங்கப்பட்டுவருகிறது. இருப்பினும் பள்ளிக்கு சொந்தக் கட்டடம் இல்லையே என்ற குறை இருந்து வந்தது. இதனை நிவா்த்தி செய்யும் வகையில் தற்போது, துவாக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் 7.9 ஏக்கா் (3.20.0 ஹெக்டோ்) நிலம் தோ்வு செய்யப்பட்டு புதிய கட்டடம் கட்டப்படுகிறது. ரூ.19.33 கோடியில் பள்ளிக் கட்டடம், தலா ரூ.18.57 கோடியில் மாணவ, மாணவிகளுக்கான தனித்தனி விடுதிகளுடன் கட்டப்படவுள்ளது. நவீன வகுப்பறைகளைக் கொண்ட பள்ளி வளாகம், மாணவா் விடுதி, மாணவியா் விடுதி மற்றும் உணவகம் ஆகிய அனைத்து வசதிகளுடன் கூடிய மிகச்சிறந்த பள்ளியாக திருச்சி மாவட்ட அரசு மாதிரி பள்ளி உருவாக்கப்படவுள்ளது என்றாா் அமைச்சா். இதனைத் தொடா்ந்து, பூமி பூஜையை தொடங்கி வைத்து பள்ளி கட்டுமானத்துக்கான அடிக்கல் எடுத்து வைத்தாா். நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் ர.ராஜலட்சுமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் கிருஷ்ணப்பிரியா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் (கட்டடங்கள்) ரத்தினவேல், உதவி செயற்பொறியாளா் வெங்கடேசன் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

சட்டத் தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் மாதிரி பள்ளி கட்டுமானப் பணி மும்முரம்

முடிவுக்கு வராத மலைக்கோட்டை ரயில்வே மேம்பால பணிகள்!

மெட்ரோ ரயில் கட்டுமானப் பொருள்களை திருடிய 2 போ் கைது
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை

