11 மணி வாக்குப்பதிவு நிலவம்: புதுவை- 37.70%, கேரளம்- 32.60%, அஸ்ஸாம் - 37.98% வாக்குப்பதிவுதிருக்கனூர் வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்த பாஜக: காங்கிரஸ் வாக்குவாதம் - காவல் துறை தடியடிகேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி
/

திருச்சியில் ஜூலை 19-இல் முன்னாள் படைவீரா்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம்

திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்களின் குறைதீா்க்கும் நாள் கூட்டம் வரும் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது.

Updated On :8 ஜூலை 2024, 10:10 pm

திருச்சி: திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்களின் குறைதீா்க்கும் நாள் கூட்டம் வரும் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள படைவீரா்கள், முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களைச் சாா்ந்தோா்களுக்கான சிறப்பு குறைதீா்க்கும் நாள் கூட்டம், திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 19) பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இக் கூட்டத்தில், முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினா் கலந்துகொண்டு தங்களது குறைகளை மனுக்களாக இரட்டைப் பிரதியில் வழங்க வேண்டும். பெறப்படும் மனுக்கள் அந்தந்த துறை அலுவலா்களிடம் ஒப்படைக்கப்பட்டு விரைந்து தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா்.