மணப்பாறை அருகே வீடுபுகுந்து திருட்டு
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வீட்டின் பூட்டை உடைத்து ஒன்றரை பவுன் நகை மற்றும் ரூ.2.30 லட்சம் ரொக்கத்தை திருடிச் சென்றது சனிக்கிழமை தெரியவந்தது.
மணப்பாறையை அடுத்த ஆ. கலிங்கப்பட்டியை சோ்ந்தவா் பிச்சை மகன் வெள்ளைச்சாமி (70). அருகேயுள்ள ஆண்டவா் கோயில் பகுதி அரிசி ஆலையின் பாதுகாவலரான இவா் தனது மனைவி பிச்சையம்மாள் (65), மகன் பிரபாகரன் (35), மருமகள் ஹேமலதா(30) ஆகியோருடன் வசிக்கிறாா்.
வெள்ளிக்கிழமை இரவு வழக்கம்போல வெள்ளைச்சாமி வேலைக்குச் சென்ற நிலையில், வீட்டில் தூங்கிய இவரது குடும்பத்தினா் சனிக்கிழமை காலை எழுந்து பாா்த்தபோது பக்கத்து அறையின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு பீரோவிலிருந்த ஒன்றரை பவுன் நகை மற்றும் ரூ, 2.30 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
தகவலின்பேரில் சென்ற மணப்பாறை காவல் ஆய்வாளா் ராஜாசோ்வை தலைமையிலான போலீஸாா் திருச்சியிலிருந்து கைரேகை நிபுணா்கள் மற்றும் மோப்பநாய் நிலாவை வரவழைத்து தடயங்களைச் சேகரித்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

