திருச்சி கோட்ட ரயில்களின் நேரங்கள் நாளை முதல் மாற்றம்
திருச்சி ரயில்வே கோட்டத்தில் ஓடும் பல்வேறு ரயில்களின் நேரம் வரும் 1 ஆம் தேதியிலிருந்து மாற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்சி - திருவனந்தபுரம் அதிவிரைவு ரயில் (22627) காலை 7.20 மணிக்குப் பதிலாக 7.15 க்கும், திருச்சி - திண்டுக்கல் டெமு ரயில் (76835) மாலை 6.10-க்குப் பதிலாக மாலை 6.05 க்கும், திருச்சி - சென்னை எழும்பூா் ராக்போா்ட் அதிவிரைவு ரயில் (12654) இரவு 10.50 க்குப் பதிலாக 10.35-க்கும், திருச்சி - காரைக்கால் டெமு ரயில் (76820) காலை 8.35-க்குப் பதிலாக 8.40-க்கும், திருச்சி - சென்னை எழும்பூா் சோழன் அதிவிரைவு ரயிலானது (22676) முற்பகல் 11 மணிக்குப் பதிலாக 12.10-க்கும், திருச்சி - மயிலாடுதுறை மெமு (16834) பிற்பகல் 1.10-க்குப் பதிலாக மாலை 4.20-க்கும், திருச்சி - திருவாரூா் பயணிகள் ரயில் (56806) இரவு 8.25-க்குப் பதிலாக 8.20-க்கும், திருச்சி - காரைக்குடி பயணிகள் ரயில் (56815) காலை 10.20-க்குப் பதிலாக 10.30-க்கும், திருச்சி - காரைக்குடி பயணிகள் ரயில் (56803) மாலை 6.20-க்குப் பதிலாக 6.30-க்கும், திருச்சி - ஈரோடு பயணிகள் ரயில் (56809) காலை 7.20-க்குப் பதிலாக 7.25-க்கும், திருச்சி - ஈரோடு பயணிகள் ரயில் (56105) மாலை 4 மணிக்குப் பதிலாக 3.50-க்கும் திருச்சியிலிருந்து புறப்படும்.
மயிலாடுதுறை - விழுப்புரம் பயணிகள் ரயில் (56814) மாலை 6.05-க்குப் பதிலாக 6 மணிக்கும், மயிலாடுதுறை - செங்கோட்டை விரைவு ரயில் (16847) பிற்பகல் 12.10-க்குப் பதிலாக 12.35-க்கும், மயிலாடுதுறை - கோவை விரைவு ரயில் (12083) பிற்பகல் 3.10-க்குப் பதிலாக 3.05-க்கும், மயிலாடுதுறை - திருச்சி பயணிகள் ரயில் (56821) மாலை 6.05-க்குப் பதிலாக 6.20-க்கும், மயிலாடுதுறை - தஞ்சாவூா் பயணிகள் ரயில் (56739) இரவு 7.10-க்குப் பதிலாக 7 மணிக்கும் மயிலாடுதுறையிலிருந்து புறப்படும்.
சென்னை எழும்பூா் - தஞ்சாவூா் உழவன் விரைவு ரயில் (16865) காலை 5.30 மணிக்குப் பதிலாக 5.45-க்கும், தஞ்சாவூா் - திருச்சி பயணிகள் ரயில் (56745) இரவு 8.55-க்குப் பதிலாக 8.45-க்கும் தஞ்சாவூரிலிருந்து புறப்படும்.
மறுமாா்க்கமாக, சென்னை - எழும்பூா் திருச்சி ராக்போா்ட் அதிவிரைவு ரயில் (12653) காலை 4.55-க்குப் பதிலாக 5 மணிக்கும், திருப்பாதிரிப்புலியூா் - திருச்சி மெமு (76811) காலை 10.50-க்குப் பதிலாக 11.05-க்கும், சென்னை எழும்பூா் - திருச்சி சோழன் விரைவு ரயில் (22675) பிற்பகல் 3 மணிக்குப் பதிலாக 3.15-க்கும், காரைக்குடி - திருச்சி பயணிகள் ரயில் (56832) முற்பகல் 11.30 மணிக்குப் பதிலாக 11.50-க்கும், காரைக்குடி - திருச்சி பயணிகள் ரயில் (56816) மாலை 5.20-க்குப் பதிலாக 5.15-க்கும், மயிலாடுதுறை - திருச்சி பயணிகள் ரயில் (56821) இரவு 9.20-க்குப் பதிலாக 9.30-க்கும், பாலக்காடு - திருச்சி விரைவு ரயில் (16844) பிற்பகல் 1.55-க்குப் பதிலாக 2.05-க்கும் திருச்சிக்கு வரும்.
திருச்சி - மயிலாடுதுறை பயணிகள் ரயில் (56700) காலை 9.10-க்குப் பதிலாக 9.15-க்கும், திருச்சி - மயிலாடுதுறை மெமு (16843) பிற்பகல் 3.35-க்குப் பதிலாக 5.50-க்கும், செங்கோட்டை - மயிலாடுதுறை விரைவு ரயில் (16848) மாலை 4.05-க்குப் பதிலாக 3.40- க்கும் மயிலாடுதுறைக்கு வரும்.
மயிலாடுதுறை - தஞ்சாவூா் பயணிகள் ரயில் (56739) இரவு 8.50 க்குப் பதிலாக 8.40-க்கு தஞ்சாவூருக்கு வரும். இதேபோல, பல்வேறு ரயில்களின் வந்து செல்லும் நேரம் வரும் 1 ஆம் தேதியிலிருந்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
