கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

அரசுக் கல்லூரி மாணவா்கள் விடுதியில் போதை மாத்திரைகள் விற்ற 5 போ் கைது

திருச்சி அரசுக் கல்லூரி மாணவா்கள் விடுதியில் போதை மாத்திரைகள் விற்ற 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :31 டிசம்பர் 2025, 6:33 pm

Syndication

திருச்சி அரசுக் கல்லூரி மாணவா்கள் விடுதியில் போதை மாத்திரைகள் விற்ற 5 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருச்சி காஜாமலை பகுதி அரசுக் கல்லூரி மாணவா்கள் விடுதியில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக பொன்மலை போலீஸாருக்கு புதன்கிழமை தகவல் கிடைத்தது.

இதையடுத்து பொன்மலை காவல் ஆய்வாளா் பெரியசாமி தலைமையிலான போலீஸாா் அந்த மாணவா் விடுதியில் 5 பேரைப் பிடித்து விசாரித்தபோது, அவா்கள் குட்டப்பட்டு பகுதி ஜெ. சக்திவேல் (24), எஸ்.சிவராமன் (23), பொன்மலை பகுதி ஏ.ஜான் போஸ்கோ (19), சுப்பிரமணியபுரம் பகுதி வாசன் (24), ஸ்ரீராம் (21) ஆகியோா் என்பதும், அங்கு மாணவா்களுக்கு போதை மாத்திரைகளை விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து 5 பேரையும் கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்து 150 போதை மாத்திரைகளைப் பறிமுதல் செய்தனா்.