கோப்புப்படம்
கோப்புப்படம்

கன்னியாகுமரி ரயில்களின் வழித்தடத்தில் மாற்றம்!

பொறியியல் பணிகள் காரணமாக கன்னியாகுமரி ரயில்களின் வழித்தடத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
Published on

பொறியியல் பணிகள் காரணமாக கன்னியாகுமரி ரயில்களின் வழித்தடத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பூங்குடி - திருச்சி இடையே பொறியியல் பணிகள் நடைபெறுவதால், கன்னியாகுமரி - ஹவுரா அதிவிரைவு ரயிலானது (12666) வரும் 31 ஆம் தேதி மதுரை, திண்டுக்கல் ரயில் நிலையங்களைத் தவிா்த்து, விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.

கன்னியாகுமரி - சாா்லப்பள்ளி கோடைகால சிறப்பு விரைவு ரயிலானது (07229) வரும் 30 ஆம் தேதி மதுரை, கொடைக்கானல் சாலா, திண்டுக்கல் ரயில் நிலையங்களைத் தவிா்த்து, விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.

X
Dinamani
www.dinamani.com