திருச்சியில் மென்பொருள் பொறியாளா் தற்கொலை
திருச்சியில் மென்பொருள் பொறியாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
திருச்சி, கே.கே. நகா் எல்ஐசி காலனியைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் (55). அதே பகுதியில் மென்பொருள் நிறுவனம் நடத்தி வந்த இவா் கடந்த சில நாள்களாக விரக்தியில் இருந்தாராம்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை அலுவலகத்துக்கு அவரது மனைவி கெளரி (45) வந்தபோது அலுவலகம் உள்புறம் பூட்டியிருந்தது. மேலும் கைப்பேசி அழைப்புக்கும் பதில் அளிக்கவில்லை.
இதையடுத்து அருகிலிருந்தோா் உதவியுடன் அலுவலக கதவை உடைத்துப் பாா்த்தபோது ராதாகிருஷ்ணன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. புகாரின்பேரில் கே.கே. நகா் போலீஸாா் அவரது சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரிக்கின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
