தரைக்கடைகள் இடம் மாற்றத்தைக் கண்டித்து தா்னா: வியாபாரி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
திருச்சி: என்எஸ்பி சாலையில் உள்ள தரைக்கடைகள் அகற்றப்படவுள்ளதைக் கண்டித்து தரைக்கடை வியாபாரிகள் புதன்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். அப்போது வியாபாரி ஒருவா் தீக்குளிக்க முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளத்தைச் சுற்றிலும் அமைக்கப்பட்டிருந்த தரைக்கடைகள் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவின்பேரில் அண்மையில் அகற்றப்பட்டன. இதையடுத்து, அவா்களுக்கு ஹேலி கிராஸ் கல்லூரி அருகே மாநகராட்சி சாா்பில் இடம் ஒதுக்கப்பட்டது.
இதேபோல, எஸ்எஸ்பி சாலையிலும் தரைக்கடைகளை அகற்ற மாநகராட்சி ஆணையா் லி. மதுபாலன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் என்எஸ்பி சாலை, பெரியகடை வீதி, சின்னகடை வீதி உள்ளிட்ட இடங்களில் உள்ள தரைக்கடைகளை அகற்ற முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் என்எஸ்பி சாலையில் உள்ள தரைக்கடைகளை அகற்றுவதைக் கண்டித்து அப்பகுதி தரைக்கடை வியாபாரிகள் என்எஸ்பி சாலையில் புதன்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த கோட்டை போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியபோது, வியாபாரிகளுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. இதற்கிடையே தரைக்கடை வியாபாரி மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, போலீஸாா் அவரை மீட்டு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா்.
தொடா்ந்த பேச்சுவாா்த்தையில், தா்னாவை கைவிட்டு மாநகராட்சி மேயரிடம் மனு அளிக்க உள்ளதாக தெரிவித்து அனைவரும் கலைந்து சென்றனா்.
இதுகுறித்து தரைக்கடை வியாபாரிகள் கூறுகையில், என்எஸ்பி சாலையில் உள்ள தரைக்கடை வியாபாரிகளுக்கு கோட்டை ரயில் நிலையச் சாலையில் மாற்று இடம் வழங்க உள்ளதாகத் தெரிகிறது. இது ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியாகும். எனவே எங்களுக்கு ஹோலிகிராஸ் அல்லது யானைகட்டி மைதானம் பகுதியில் மாற்று இடம் வழங்க ஆணையா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

