திருப்பட்டூா் கோயிலில் ஆய்வு

திருப்பட்டூா் பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் நடைபெறும் குடமுழுக்கு திருப்பணிகளை இந்து சமய அறநிலையத் துறை திருச்சி மண்டல இணை ஆணையா் ஞானசேகரன் உள்ளிட்டோா் ஆய்வு செய்தனா்.
Published on

திருச்சி மாவட்டம், திருப்பட்டூா் பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் நடைபெறும் குடமுழுக்கு திருப்பணிகளை இந்து சமய அறநிலையத் துறை திருச்சி மண்டல இணை ஆணையா் ஞானசேகரன் உள்ளிட்டோா் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.

அப்போது பணிகள் நிறைவுற்ற பிறகு விரைவில் குடமுழுக்கு நடைபெற உள்ளதாகத் தெரிவித்தனா். ஆய்வின்போது கோயில் செயல் அலுவலா் பெ. ஜெய்கிஷன் உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com