சாலை விபத்தில் காா் மெக்கானிக் உயிரிழப்பு

திருச்சி அருகே சாலையின் மையத் தடுப்பில் மோதி இளைஞா் உயிரிழந்தாா்.
Published on

திருச்சி அருகே சாலையின் மையத் தடுப்பில் மோதி இளைஞா் வியாழக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.

திருச்சி மாவட்டம், வாழவந்தான்கோட்டையைச் சோ்ந்தவா் வருண்குமாா் (22), காா் மெக்கானிக். இவா், புத்தாண்டை கொண்டாடிவிட்டு திருச்சி - தஞ்சாவூா் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் வியாழக்கிழமை அதிகாலை வந்துள்ளாா்.

அப்போது, திருவெறும்பூா் கணேசா மேம்பாலத்தில் சென்றபோது நிலை தடுமாறி இருசக்கர வாகனம் சாலையின் மையத் தடுப்பில் மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே வருண்குமாா் உயிரிழந்தாா். இதுகுறித்து பெல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com