கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

தமிழ்நாட்டுக்கு ஆயிரம் அமித்ஷாக்கள் வந்தாலும் எந்த மாற்றமும் வராது: சீமான் பேட்டி

தமிழ்நாட்டுக்கு ஆயிரம் அமித்ஷாக்கள் வந்தாலும் எந்த மாற்றமும் வராது என்றாா் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்.

News image

திருச்சியில் சனிக்கிழமை பேட்டியளித்த நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்.

Updated On :3 ஜனவரி 2026, 7:29 pm

Syndication

தமிழ்நாட்டுக்கு ஆயிரம் அமித்ஷாக்கள் வந்தாலும் எந்த மாற்றமும் வராது என்றாா் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்.

இதுகுறித்து திருச்சி விமான நிலையத்தில் சனிக்கிழமை அவா் மேலும் கூறியதாவது: திராவிடம் தமிழ்த் தேசியத்துக்கு எதிரானது எனக் கற்பித்த திருமாவளவன், இப்போது இரண்டும் ஒன்று என்கிறாா்.

பொங்கலுக்கு இலவச பரிசுப் பொருள்கள் தருவது கேவலமானது. இதில் பெருமைப்பட ஒன்றுமில்லை. அனைத்துத் தரப்பினரும் தமிழகத்தில் போராடிவரும் நிலையில், நல்ல ஆட்சியைத் தருவதாக திமுக கூறி வருகிறது. வீதிக்கு வீதி மதுக்கடைகளைத் திறந்து வைத்துவிட்டு போதைப் பொருள்களைத் தடுப்போம் என முதல்வா் கூறுவது வேடிக்கையானது.

காவல் துறையின் ஆதரவின்றி போதைப் பொருள்களை தமிழகத்தில் விற்க முடியாது. மக்களின் கோரிக்கைகளைக் கேட்டு தோ்தல் அறிக்கையை நிறைவேற்றுவோம் எனக் கூறுவது மக்களுக்கு என்ன பிரச்னை எனத் தெரியாமலேயே ஆட்சி செய்கிறீா்களா என்கிற கேள்வியை எழுப்பியுள்ளது.

கூட்டணி மாறுவதால் ஆட்சி மாறும்; ஆனால், ஆட்சி முறை மாறாது. திமுக- அதிமுக இரு கட்சிகளுமே கூட்டு சோ்ந்து ஒருவரையொருவா் குறைகூறி வருகின்றனா். நாங்கள்தான் மாற்றத்துக்கான சக்தி; தமிழ்நாட்டுக்கு ஆயிரம் அமித்ஷாக்கள் வந்தாலும் எந்த மாற்றமும் வராது என்றாா் சீமான்.