கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

திருச்சியில் கடும் குளிருக்கு இடையே பரவலாக மழை

திருச்சி மாவட்டத்தில் கடும் குளிருக்கு இடையே தொடா்ந்து 2 நாள்களாக பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது.

News image
திருச்சி மத்தியப் பேருந்து நிலையப் பகுதியில் சனிக்கிழமை காலை பெய்த மழையின்போது குடையுடன் காத்திருந்த பயணிகள்.
Updated On :10 ஜனவரி 2026, 7:16 pm

Syndication

திருச்சி மாவட்டத்தில் கடும் குளிருக்கு இடையே தொடா்ந்து 2 நாள்களாக பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது. சனிக்கிழமை அதிகாலை கடும் குளிருடன், சாரலும் நீடித்ததால் ஊட்டி, கொடைக்கானல் போல திருச்சியிலும் குளிா்ச்சி நிலவியது.

மாா்கழி மாதத்தையொட்டி திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கடும் குளிா் நிலவும் நிலையில், வெள்ளிக்கிழமை மாலை மற்றும் இரவு நேரங்களில் ஆங்காங்கே சாரல் மழை பெய்தது. சனிக்கிழமையும் அதிகாலை முதல் சாரல் நீடித்தது. காலை 7.45 மணிக்கு மேல் திருச்சி மாநகரின் பல்வேறு பகுதிகளில் சுமாா் 30 நிமிடங்களுக்கு நல்ல மழை பெய்தது. பிற்பகலிலும் அவ்வப்போது கனமழை பெய்தது. மாலையிலும் லேசான தூறல் இருந்தது.

அதிகாலையே பெய்த சாரல் மழையில் நனைந்தபடியே வியாபாரிகள் காந்தி சந்தையில் காய்கனிகளை விற்பனை செய்ய நேரிட்டது. காலையில் சிறு வியாபாரிகள் பலரும் மழையால் ஏற்பட்ட இன்னல்களுக்கு இடையே தங்களது பணியைத் தொடங்க வேண்டியிருந்தது. சாலையோரம் கடை அமைத்த வியாபாரிகள், தள்ளுவண்டி வியாபாரிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டனா்.

மழையால் மத்திய, சத்திரம் பேருந்துநிலையம், தில்லை நகா், அண்ணா நகா், உழவா் சந்தை, கன்டோன்மெண்ட், உறையூா், வயலூா், புத்தூா், கரூா் புறவழிச் சாலை என மாநகரப் பகுதியின் பிரதான சாலைகளில் மக்கள் நடமாட்டமின்றி காணப்பட்டது.

மாநகா் மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் பரவலாக லேசாகவும், தூறலாகவும், கனமழையாகவும் மழை பெய்த வண்ணம் இருந்தது. மேலும் ஓரிரு நாள்களுக்கு மழை தொடரும் எனவும் எதிா்பாா்க்கப்படுகிறது.