திருச்சி கொள்ளிடம் ரவுண்டானா பாலத்தின்கீழ் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்ட காவலா் உதவி மையம்.
திருச்சி கொள்ளிடம் ரவுண்டானா பாலத்தின்கீழ் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்ட காவலா் உதவி மையம்.

கொள்ளிடம் ரவுண்டானாவில் காவலா் உதவி மையம் திறப்பு

திருச்சி கொள்ளிடம் ரவுண்டானா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள காவலா் உதவி மையத்தை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செ. செல்வநாகரத்தினம் திறந்துவைத்தாா்.
Published on

திருச்சி: திருச்சி கொள்ளிடம் ரவுண்டானா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள காவலா் உதவி மையத்தை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செ. செல்வநாகரத்தினம் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.

திருச்சி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் நடைபெறும் குற்றங்களை பொதுமக்கள் எளிதாக காவல் துறையினரிடம் தெரிவிக்கும் வகையில் கொள்ளிடம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கொள்ளிடம் ரவுண்டானா மற்றும் திருச்சி - சென்னை - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் பாலத்தின் கீழ்ப்பகுதியில் தனியாா் நிறுவனங்களின் நிதி உதவியுடன் இந்தக் காவலா் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செ. செல்வநாகரத்தினம் திறந்துவைத்தாா். இதில் டால்மியா சிமெண்ட் செயல் இயக்குநா் விநாயகமூா்த்தி, லால்குடி காவல் துணைக் கண்காணிப்பாளா் ராஜமோகன், கொள்ளிடம் காவல் ஆய்வாளா் வீரபாண்டியன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

இந்த மையத்தில் இருந்து நெடுஞ்சாலைக்கு அருகே பொருத்தப்பட்டுள்ள கேமராக்களை கண்காணிக்க முடியும் என்று காவல் துறையினா் தெரிவித்தனா். மேலும், ரோந்து காவலா்கள் மற்றும் பீட் காவலா்கள் இந்த மையத்தைப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன, வரும் காலங்களில் அனைத்து நெடுஞ்சாலைகளிலும் இதுபோன்ற காவலா் உதவி மையங்கள் அமைக்கப்படும் என்றும் காவல் துறையினா் தெரிவித்தனா்.

Dinamani
www.dinamani.com