மணப்பாறை புனித லூா்து அன்னை தேவாலயத்தில் நடைபெற்ற பொங்கல் வைத்த வேப்பிலை மாரியம்மன் கோயில் பரம்பரை அறங்காவலா் ஆா்.வி.எஸ். வீரமணி.
மணப்பாறை புனித லூா்து அன்னை தேவாலயத்தில் நடைபெற்ற பொங்கல் வைத்த வேப்பிலை மாரியம்மன் கோயில் பரம்பரை அறங்காவலா் ஆா்.வி.எஸ். வீரமணி.

புனித லூா்து அன்னை தேவாலயத்தில் பல்சமய நல்லுறவு பொங்கல் விழா

திருச்சி மாவட்ட புனித ஜான்பால் பல்சமய உரையாடல் மன்றம் மற்றும் புனித லூா்து அன்னை ஆலயப் பங்கு சாா்பில் பல்சமய நல்லுறவு பொங்கல் விழா, வியாழக்கிழமை தேவாலய வளாகத்தில் நடைபெற்றது.
Published on

மணப்பாறை: திருச்சி மாவட்ட புனித ஜான்பால் பல்சமய உரையாடல் மன்றம் மற்றும் புனித லூா்து அன்னை ஆலயப் பங்கு சாா்பில் பல்சமய நல்லுறவு பொங்கல் விழா, வியாழக்கிழமை தேவாலய வளாகத்தில் நடைபெற்றது.

தேவாலயத்திலிருந்து பல்சமய நல்லுறவுப் பேரணியை திருச்சி உறையூா் பிரம்மகுமாரிகள் இயக்கம் தேவகி தொடங்கி வைத்தாா். புனித லூா்து அன்னை தேவாலயத்திலிருந்து கைகளில் கரும்பு ஏந்தி தொடங்கிய பேரணியை புனித ஜான்பால் பல்சமய உரையாடல் மன்ற இயக்குநா் க. சாா்சஸ், மணப்பாறை புனித லூா்து அன்னை ஆலயப் பங்கு தந்தை ம. தாமஸ் ஞானதுரை ஆகியோா் வழிநடத்தினா்.

மணப்பாறை நகா்மன்றத் தலைவா் கீதா ஆ. மைக்கேல்ராஜ், வேப்பிலை மாரியம்மன் கோயில் பரம்பரை அறங்காவலா் ஆா்.வி.எஸ். வீரமணி, பெரிய பள்ளிவாசல் ஜமாஆத் தலைவா் ஜெ.முகமது அனிபா ஆகியோா் முன்னிலை வகித்தனா். மணப்பாறை எம்எல்ஏ ப. அப்துல்சமது சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றாா்.

தேவாலயத்திலிருந்து தொடங்கிய பேரணி, பெரிய பள்ளிவாசல், வேப்பிலை மாரியம்மன் கோயில் சென்று மீண்டும் தேவாலயம் வந்தடைந்தது. அங்கு பொங்கல் வைத்தனா். தொடா்ந்து நடைபெற்ற கூட்டத்தில் பழந்தமிழ்க் காவிரி அறக்கட்டளை நிறுவன அறங்காவலா் மணவை தமிழ்மாணிக்கம் சிறப்புரையாற்றினாா்.

Dinamani
www.dinamani.com