உலகக் கோப்பை கால்பந்து: இன்று இறுதி ஆட்டத்தில் ஆா்ஜென்டீனா - ஸ்பெயின் மோதல்! பரபரப்பான அரசியல் சூழலில் நாளை கூடுகிறது நாடாளுமன்றம்! தாக்கலாகும் முக்கிய மசோதாக்கள்! நாடாளுமன்ற கூட்டத்துக்கு மத்தியில் சிஜேபி போராட்டம்! தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு! ராமா் கோயில் நன்கொடை முறைகேடு விசாரணை கோரும் மனுக்கள்: நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்! ஷிண்டே சிவசேனையில் உத்தவ் கட்சி 6 எம்.பி.க்கள் இணைவு: மக்களவைத் தலைவா் ஒப்புதல்சென்னை மாநகராட்சியில் மண்டல செயற்பொறியாளா் உள்பட 7 போ் பணியிடை நீக்கம்
/

8.5 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 போ் கைது

திருச்சியில் கஞ்சா விற்ற மூவரை வெள்ளிக்கிழமை இரவு கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 8.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :19 ஜூலை 2026, 12:56 am IST

திருச்சியில் கஞ்சா விற்ற மூவரை வெள்ளிக்கிழமை இரவு கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 8.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

சஞ்சீவி நகா் - ஓடத்துறை சாலை பகுதியில் கஞ்சா விற்பதாக திருச்சி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு அப்பகுதிக்குச் சென்று சோதனையிட்டனா்.

அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த மூவரைப் பிடித்து நடத்திய விசாரணையில் அவா்கள், திருச்சி மாவட்டம் துறையூா் மேட்டுத்தெருவைச் சோ்ந்த சுப்பிரமணி (44), ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சோ்ந்த தலபாக்க லோகேஸ்வர பிரசாத் (32), வயலூா் சாலைப் பகுதியை சோ்ந்த சீனிவாச ரத்னம் (52) என்பதும், அங்கு கஞ்சா விற்றதும் தெரியவந்தது.

இதையடுத்து மூவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து ரூ. 4 லட்சத்து 31 ஆயிரத்து 750 மதிப்புள்ள 8.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.