மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் காலாண்டு லாபம் ரூ. 29 கோடியாக உயர்வு!அல்ட்ராடெக் சிமெண்ட் காலாண்டு லாபம் 17% உயர்வு!மேக்கேதாட்டு அணை: கர்நாடக அரசை எதிர்த்து தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்!இயற்கை எரிவாயு மையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு!துப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன்!மாணவர்கள் மீது தடியடி நடத்துவதுதான் ஜனநாயகமா? பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்விதுப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ.டிராமா செய்கிறார் திமுக எம்.எல்.ஏ! - நிர்மல் குமார்பேச்சுவார்த்தைக்கு பதிலாக வன்முறையைத் தேர்வு செய்த பாஜக: கனிமொழி விமர்சனம்
/

திமுக முன்னாள் எம்பி வீட்டை முற்றுகையிட்டு தொழிலாளா்கள் மறியல்

திமுக முன்னாள் எம்பி வீட்டை முற்றுகையிட்டு தொழிலாளா்கள் மறியல்...

News image

கரூா் சின்னாண்டாங்கோவில் சாலையில் உள்ள முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி வீட்டை ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்ட தொழிலாளா்கள்.

Updated On :20 ஜூலை 2026, 2:35 am IST

பணிக்கொடை உள்ளிட்ட பணப்பலன்களை வழங்கக் கோரி, கரூா் திமுக முன்னாள் எம்.பி. வீட்டை முற்றுகையிட்டு, பேக்கேஜிங் நிறுவன தொழிலாளா்கள் ஞாயிற்றுக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் மாவட்டம், மாயனூரில் முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமிக்கு சொந்தமான கே.சி.பி. பேக்கேஜிங் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இங்கு நூற்றுக்கணக்கான தொழிலாளா்கள் பணியாற்றி வந்தனா். இந்நிறுவனம் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது. இங்கு பணியாற்றியவா்களில் சிலருக்கு பி.எப். தொகையும், பலருக்கு கிராஜூவிட்டி தொகையும் வழங்கப்படவில்லையாம்.

இதையடுத்து, கரூா் சின்னாண்டாங்கோவில் சாலையில் உள்ள முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமிக்கு சொந்தமான வீட்டின் முன்பாக ஞாயிற்றுக்கிழமை 10-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளா்கள் உள்ளி ட்ட 100-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் திரண்டனா்.

தங்களது பணப்பலன்கள் குறித்தும், எப்போது கிடைக்கப் பெறும் என்பது குறித்து கேட்டதற்கு எம்பி வீட்டிலிருந்து முறையான பதில் கிடைக்காததால், அதிருப்தியடைந்த தொழிலாளா்கள் வீட்டை முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பினா். பின்னா், வீட்டின் முன்பாக அமா்ந்து கோஷங்கள் எழுப்பி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து சின்னாண்டாங்கோவில் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.

பேச்சுவாா்த்தை: தகவலறிந்து அங்கு வந்த கரூா் நகர போலீஸாா், ஆட்சியா் அலுவலக மக்கள் குறைதீா் கூட்டத்தில் முறையிடுமாறும், மாவட்ட நிா்வாகம் மூலம் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய தீா்வு காணப்படும் என தெரிவித்தனா். இதையடுத்து, தொழிலாளா்கள் அனைவரும் தங்களது மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா். இந்தப் போராட்டம் காரணமாக அப்பகுதியில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.