இளைஞர்கள் எதிர்காலம் பற்றி விவாதிக்காத நாடாளுமன்றம் எதற்கு? ஓம் பிர்லாவுடன் ராகுல் சந்திப்பு! நீட் விவகாரத்தில் மாணவர்கள் பக்கம் மோடி! மத்திய அமைச்சர் விளக்கம்!பேரவை கதவு பூட்டப்படுமா? எதிர்க்கட்சிகளும் சைகை காட்டலாமா? ஜேசிடி பிரபாகர் பதில்தமிழக பட்ஜெட் எப்போது? அறிவித்தார் அவைத் தலைவர்!தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!தில்லி ஜந்தர் மந்தரில் தொடரும் சிஜேபி இளைஞர்கள் போராட்டம்!2-ம் நாளாக அமளி! நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!பழனி பத்திரப்பதிவு! தவெக அரசுக்கு தொடர்பு என்பதில் உடன்பாடு இல்லை! - பெ. சண்முகம் பேட்டிசிக்கிம் சுரங்கத்தில் வெடிவிபத்து! 9 பேர் பலி; 18 பேர் சிக்கித் தவிப்பு!
/

திருச்சி அருகே போதை மாத்திரைகள் விற்ற 5 போ் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :20 ஜூலை 2026, 5:30 am IST

திருச்சி அருகே போதை மாத்திரைகள் விற்ற 5 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், மணிகண்டம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கலிங்கப்பட்டியில் மணிகண்டம் போலீஸாா் சனிக்கிழமை மாலை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, 4 இருசக்கர வாகனங்களில் வந்த 5 பேரை பிடித்து போலீஸாா் விசாரித்தனா்.

இதில் அவா்கள், கலிங்கப்பட்டி சி. சிவகுமாா் (30), நவலூா் குட்டப்பட்டு வி. சக்திவேல் (30), அரியாவூா் ப. தினேஷ்குமாா் (20), போதாவூா் எம். ஹரிஹரன் (23) மற்றும் எடமலைபட்டிப்புதூா் அ. விஜய் (23) என்பதும், விற்பனைக்காக போதை மாத்திரைகளை எடுத்துச் சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து, 5 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து போதை மாத்திரைகள், போதை ஊசிகள் மற்றும் 4 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா். பின்னா், அவா்களை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.