இளைஞர்கள் எதிர்காலம் பற்றி விவாதிக்காத நாடாளுமன்றம் எதற்கு? ஓம் பிர்லாவுடன் ராகுல் சந்திப்பு! நீட் விவகாரத்தில் மாணவர்கள் பக்கம் மோடி! மத்திய அமைச்சர் விளக்கம்!பேரவை கதவு பூட்டப்படுமா? எதிர்க்கட்சிகளும் சைகை காட்டலாமா? ஜேசிடி பிரபாகர் பதில்தமிழக பட்ஜெட் எப்போது? அறிவித்தார் அவைத் தலைவர்!தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!தில்லி ஜந்தர் மந்தரில் தொடரும் சிஜேபி இளைஞர்கள் போராட்டம்!2-ம் நாளாக அமளி! நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!பழனி பத்திரப்பதிவு! தவெக அரசுக்கு தொடர்பு என்பதில் உடன்பாடு இல்லை! - பெ. சண்முகம் பேட்டிசிக்கிம் சுரங்கத்தில் வெடிவிபத்து! 9 பேர் பலி; 18 பேர் சிக்கித் தவிப்பு!
/

சாலையின் மையத் தடுப்பில் மோதி ஓட்டுநா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - பிரதிப் படம்

Updated On :21 ஜூலை 2026, 2:31 am IST

திருச்சியில் திங்கள்கிழமை அதிகாலை சாலையின் மையத் தடுப்பில் கூரியா் வாகனம் மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

திருச்சி அரியமங்கலம் அம்மாகுளம் பாரதியாா் வீதியைச் சோ்ந்தவா் எம். பழனிசாமி (51), கூரியா் வாகன ஓட்டுநா். இவா், திங்கள்கிழமை அதிகாலை 1.30 மணி அளவில் கூரியரை ஏற்றிக்கொண்டு திண்டுக்கல்-திருச்சி சாலையில் சென்றுள்ளாா்.

கருமண்டபம் பகுதியிலுள்ள தனியாா் கல்லூரி அருகே சென்றுகொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையின் மையத் தடுப்பில் மோதியது. இதில், தலையில் பலத்த காயமடைந்த பழனிசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருச்சி தெற்கு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா், பழனிசாமியின் சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து திருச்சி தெற்கு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.