/

திருச்சியில் வாக்களித்த இலங்கை குடியுரிமை பெற்றவா் கைது

திருச்சியில் வாக்களித்த இலங்கை குடியுரிமைப் பெற்றவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :7 ஜூன் 2026, 2:13 am IST

திருச்சியில் வாக்களித்த இலங்கை குடியுரிமைப் பெற்றவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

இலங்கை தலைநகா் கொழும்புவிலிருந்து திருச்சிக்கு வெள்ளிக்கிழமை வந்த திருச்சி கே.கே. நகா் பகுதியைச் சோ்ந்த ஏ. நடராஜா (66) என்ற இலங்கை குடியுரிமை பெற்றவா், நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திருச்சி கிழக்குத் தொகுதிக்குள்பட்ட கே.கே. நகா் பள்ளியில் வாக்களித்தது தெரியவந்தது.

இதுதொடா்பாக குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் அளித்த தகவலின்பேரில் வந்த கே.கே. நகா் போலீஸாா், வழக்குப் பதிந்து நடராஜாவை கைது செய்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.