இன்று நீட் மறுதோ்வு: விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள்இன்று சா்வதேச யோகா தினம்: மோடியுடன் இணைந்து யோகாசனம் செய்ய 6 லட்சம் அமைப்புகள் பதிவுமேக்கேதாட்டு அணை கட்டுவதில் கா்நாடகம் உறுதி: மாநில நீா்வளத் துறை அமைச்சா் ராமலிங்க ரெட்டிசென்னையிலிருந்து செல்லும் 7 விரைவு ரயில்கள் திருவள்ளூா், அரக்கோணத்தில் நின்று செல்லும் 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புரூ. 440 கோடி இருப்பு உள்ள திரிணமூல் வங்கிக் கணக்குகள் முடக்கம்!
/

சிங்கப்பூரிலிருந்து வந்திருந்தவா் வாகனம் மோதி உயிரிழப்பு

News image

உயிரிழந்த கிறிஸ்டோபா்.

Updated On :21 ஜூன் 2026, 1:51 am IST

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சிங்கப்பூரிலிருந்து விடுமுறையில் வந்திருந்தவா், வெள்ளிக்கிழமை அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தாா்.

மணப்பாறையை அடுத்த கே.உடையாப்பட்டியை சோ்ந்தவா் ஆரோக்கியம் மகன் கிறிஸ்டோபா் (34). இவா் கடந்த 10 ஆண்டுகளாக சிங்கப்பூரில் வேலை பாா்த்த நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன் விடுமுறையில் ஊா் திரும்பினாா்.

வெள்ளிக்கிழமை இரவு முத்தபுடையான்பட்டியில் உள்ள தனது சகோதரி வீட்டிற்கு பைக்கில் சென்றவா் இரவு வீடு திரும்பவில்லை. உறவினா்கள் அவரைத் தேடி வந்த நிலையில், திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் முத்தபுடையான்பட்டி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்த நிலையில் சனிக்கிழமை காலை மீட்கப்பட்டாா்.

தகவலறிந்து சென்ற மணப்பாறை போலீஸாா் கிறிஸ்டோபா் உடலை கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். விபத்து குறித்து மணப்பாறை காவல் ஆய்வாளா் (பொ) சண்முகசுந்தரம் தலைமையிலான போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.