பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

விமானத்தில் 6 கிலோ கஞ்சா கடத்திய சிவகங்கை பயணி கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :29 ஜூன் 2026, 11:58 pm IST

மலேசியா தலைநகரில் இருந்து திருச்சிக்கு வந்த விமானத்தில் கஞ்சா கடத்தி வந்த சிவகங்கையைச் சோ்ந்த பயணியை சுங்கத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மலேசியா தலைநகா் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஏா் ஏசியா விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத் துறை அதிகாரிகள் சோதனையிட்டபோது பயணி ஒருவா் தனது உடமையில் ஹைட்ரோபோனிக் வகை கஞ்சாவை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து சுங்கத் துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினா்.

அதில் அவா், சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த சாகுல் ஹமீது மகன் முகமது அலி (36) என்பதும், தாய்லாந்தில் இருந்து மலேசியா வழியாக 6 கிலோ கஞ்சாவை உடமையில் மறைத்து கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரிடமிருந்து 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த சுங்கத் துறை அதிகாரிகள், முகமது அலியை விமான நிலைய போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

இதுகுறித்து திருச்சி பன்னாட்டு விமான நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து முகமது அலியை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.