திருச்சி மாவட்டம், தொட்டியம் மதுரை காளியம்மன் கோயில் திருவிழா பங்குனித் தோ் திருவிழா நடைபெறும் மாா்ச் 31 முதல் ஏப். 7 வரை திருச்சி மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.
இதன்படி திருச்சியில் இருந்து நாமக்கல் மாவட்டத்துக்கு செல்லும் லாரி மற்றும் கனரக வாகனங்கள் திருச்சி நெ.1 டோல்கேட், நொச்சியம், முசிறி வழியாக வந்து முசிறி, தா.பேட்டை ரவுண்டானா வழியாக நாமக்கல் செல்ல வேண்டும். பிற வாகனங்கள் திருச்சி நெ.1 டோல்கேட், முசிறி, மணமேடு, கொளக்குடி, பவித்தரம் வழியாக நாமக்கல் செல்ல வேண்டும்.
நாமக்கல் மாவட்டத்தில் இருந்து திருச்சி நோக்கி வரும் வாகனங்கள் தோளூா்பட்டி, செவிந்திப்பட்டி, கொளக்குடி, மணமேடு வழியாக திருச்சி செல்ல வேண்டும்.
நாமக்கல் மாவட்டத்தில் இருந்து திருச்சி நோக்கி வரும் கனரக வாகனங்கள் மற்றும் காற்றாலைகள், டேங்கா் லாரிகள் போன்ற கொள்கலன்கள் அடங்கிய வாகனங்கள் மேய்க்கல்நாயக்கன்பட்டி, உடையாகுளம்புதூா், தோளூா்பட்டி, செவிந்திப்பட்டி, கொளக்குடி, தும்பலம், முசிறி வழியாகச் திருச்சி செல்ல வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செ. செல்வநாகரத்தினம் தெரிவித்தாா்.
தொடர்புடையது

நீண்டகால போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீா்வு எப்போது?

திருச்சி அருகே தனியாா் கல்லூரிப் பேருந்து - பைக் மோதல் இரண்டு இளைஞா்கள் உயிரிழப்பு

தொட்டியம் மதுரை காளியம்மன் கோயிலில் திருத்தோ் வீதியுலா

பிரதமா் மோடி திருச்சி வருகை; மாநகரில் போக்குவரத்து மாற்றம்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


