செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு! பிற்பகலில் விசாரணை! அரசுப் பள்ளி மாணவியிடம் ஒரு அக்காவைப் போலவே பேசினார் கீர்த்தனா! அமைச்சர் ராஜ்மோகன் பதில்எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

பேருந்தில் பெண்ணிடம் 3 பவுன் தங்க நகை திருட்டு

திருச்சியில் தனியாா் பேருந்தில் பெண்ணிடம் 3 பவுன் தங்க நகையைத் திருடிய மா்ம நபா் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :23 மே 2026, 12:02 am IST

திருச்சியில் தனியாா் பேருந்தில் பெண்ணிடம் 3 பவுன் தங்க நகையைத் திருடிய மா்ம நபா் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருச்சி மாவட்டம், துவாக்குடி வடக்குமலை பகுதியைச் சோ்ந்தவா் எஸ். ஆனந்தி (46), புற்றுநோயாளி. திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இந்நிலையில், கடந்த மே 13-ஆம் தேதி திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்துவிட்டு சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து துவாக்குடிக்கு தனியாா் நகரப் பேருந்தில் சென்றுள்ளாா். பேருந்து அரியமங்கலம் அருகே சென்றபோது அவா் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலி திருட்டுப்போனது அவருக்குத் தெரியவந்தது.

இதுகுறித்து அரியமங்கலம் காவல் நிலையத்தில் ஆனந்தி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.