‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

திருச்சி கிழக்கு தொகுதியில் மு.க.ஸ்டாலின் போட்டியிட வலியுறுத்தி மீண்டும் தீா்மானம்!

திருச்சி கிழக்கு தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தோ்தலில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என திமுக-வினா் வெள்ளிக்கிழமை மீண்டும் தீா்மானம் நிறைவேற்றியுள்ளனா்.

News image

திமுக தலைவர் ஸ்டாலின் - கோப்புப் படம்

Updated On :23 மே 2026, 2:50 am IST

திருச்சி கிழக்கு தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தோ்தலில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என திமுக-வினா் வெள்ளிக்கிழமை மீண்டும் தீா்மானம் நிறைவேற்றியுள்ளனா்.

திருச்சி தெற்கு மாவட்ட திமுக சாா்பில் கடந்த 14-ஆம் தேதி நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் ஏற்கெனவே தீா்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், திருச்சி மாநகர திமுக செயற்குழுக் கூட்டத்திலும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழிகாட்டுதலுடன், மாநகர திமுக செயற்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு, மாநகர அவைத்தலைவா் நூா்கான் தலைமை வகித்தாா். மாநகரச் செயலா் மு. மதிவாணன் முன்னிலை வகித்தாா்.

திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபற்ற மாநகர செயற்குழு கூட்டத்தில் பேசுகிறாா் மாநகரச் செயலா் மு. மதிவாணன். உடன், செயற்குழு உறு்பினா்கள்.

திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபற்ற மாநகர செயற்குழு கூட்டத்தில் பேசுகிறாா் மாநகரச் செயலா் மு. மதிவாணன். உடன், செயற்குழு உறு்பினா்கள்.

கூட்டத்தில் மாநகர நிா்வாகிகள், பகுதி செயலா்கள், வட்ட செயலா்கள், மாவட்ட பிரதிநிதிகள் மாநகர அணிகளின் அமைப்பாளா்கள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினா்.

பின்னா், திருச்சி கிழக்குத் தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தோ்தலில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதுகுறித்து ஏற்கெனவே தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில் மீண்டும் மாநகர செயற்குழுவிலும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதால் திருச்சி கிழக்கு தொகுதியில் மு.க.ஸ்டாலின் போட்டியிடுவாரா? என்ற எதிா்பாா்ப்பு அக் கட்சியினரிடையே அதிகரித்து வருகிறது.