‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

மத்திய மண்டலத்தில் 67 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கைது

திருச்சி மத்திய மண்டலத்தில் கடந்த இரண்டு நாள்களில் 67 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனா்.

News image
Updated On :23 மே 2026, 2:22 am IST

திருச்சி மத்திய மண்டலத்தில் கடந்த இரண்டு நாள்களில் 67 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து மத்திய மண்டல காவல் துறைத் தலைவா் வி. பாலகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்சி மத்திய மண்டலத்துக்குள்பட்ட மாவட்டங்களில் ரௌடிகளின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் வகையில் ‘ஆப்பரேஷன் பிரிவைல்’ என்ற பெயரில் 9 மாவட்டங்களில் கடந்த மே 20, 21 ஆகிய தேதிகளில் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதில், 150 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் காவல் நிலையத்துக்கு அழைத்துவரப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டனா். இவா்களில் திருச்சி-15, புத்துக்கோட்டை-2, கரூா்-10, பெரம்பலூா்-5, அரியலூா்-13, தஞ்சாவூா்-5, திருவாரூா்-5, நாகப்பட்டினம்-4, மயிலாடுதுறை-8 என மொத்தம் 67 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

மேலும், புதுக்கோட்டை-5, கரூா்-2, தஞ்சாவூா்-5, திருவாரூா்-8, நாகப்பட்டினம்-3 என மொத்தம் 23 குற்றாவளிகள் நீதித்துறை நடுவா் முன் ஆஜா்படுத்தப்பட்டு அவா்களுக்கு ஒருவருட நன்னடத்தை பிணை பெறப்பட்டுள்ளது.

மத்திய மண்டலத்துக்குள்பட்ட மாவட்டங்களில் சரித்திர பதிவேடு குற்றவாளிகளைக் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுத்து சட்டம் ஒழுங்கை பாதுகாக்க மத்திய மண்டலத்தில் உள்ள 9 மாவட்ட காவல் கண்காணிப்பாளா்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று செய்திக்குறிப்பில் அவா் தெரிவித்துள்ளாா்.