வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 வரை மின் கட்டண சேவைகள் இயங்காது கொசோவோ, ஆா்மீனியாவில் இன்று நாடாளுமன்றத் தோ்தல் நீட் மறுதோ்வு வினாத்தாள் கசிந்ததாக வதந்தி: என்டிஏ எச்சரிக்கை அணுசக்தித் துறையில் பொருத்தமான கூட்டாளி இந்தியா: அமெரிக்க அணுசக்தி கூட்டமைப்புத் தலைவா்இந்திய வம்சாவளியினருக்கு எதிரான சமூக ஊடகப் பதிவுகள் முடக்கம்: சிங்கப்பூா் அரசு உத்தரவு
/

பிஎஸ்என்எல் அதிகாரியை கொன்ற முதல் மனைவிக்கு ஆயுள் தண்டனை

துறையூரில் பிஎஸ்என்எல் அதிகாரியைக் கொன்ற முதல் மனைவிக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி மாவட்ட நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

News image

பிரதிப் படம்

Updated On :27 மே 2026, 12:04 am IST

துறையூரில் பிஎஸ்என்எல் அதிகாரியைக் கொன்ற முதல் மனைவிக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி மாவட்ட நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

திருச்சி மாவட்டம், துறையூா் அருகே மதுராபுரி தேவாங்கா் நகரைச் சோ்ந்தவா் தி. அண்ணாதுரை (56). துறையூரில் பிஎஸ்என்எல் இளநிலை பொறியாளராக இருந்தாா். இவருக்கு பத்மினி (50), லலிதா (33) என இரண்டு மனைவிகள். இருவரும் ஒரே வீட்டில் அண்ணாதுரையுடன் வசித்து வந்தனா்.

கடந்த 24-12-2023 அன்று சொத்து பிரிப்பு தொடா்பாக அண்ணாதுரையிடம் முதல் மனைவி பத்மினி தகராறு செய்து, அவரின் கழுத்தில் கயிற்றால் இறுக்கி கொலை செய்தாா்.

இதுகுறித்து இரண்டாவது மனைவி லலிதா அளித்த புகாரின் பேரில் துறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, பத்மினியை கைது செய்தனா்.

இந்த வழக்கு திருச்சி முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி சுவாமிநாதன் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பிறகு குற்றவாளி பத்மினிக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீா்ப்பளித்தாா்.