இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

ஹூப்ளி - ராமேசுவரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

News image

ஹீப்ளி-ராமேசுவரம் இடையே சிறப்பு ரயில் சேவை - கோப்புப்படம்

Updated On :30 மே 2026, 2:39 am IST

ராமேசுவரம்-ஹீப்ளி சிறப்பு ரயில் சேவையானது நீட்டிக்கப்பட்டிருப்பதாக தெற்கு ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.

இதுதொடா்பாக, தெற்கு ரயில்வே நிா்வாகத்தின் திருச்சி கோட்டம் சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கா்நாடக மாநிலம், ஹூப்ளியிலிருந்து-ராமேசுவரம் வரை ஞாயிறுதோறும் இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவையானது ஜூன் 7-ஆம் தேதி முதல் ஜூன் 28-ஆம் தேதி வரை 4 முறை நீட்டிக்கப்படுகிறது.

இதேபோல, ராமேசுவரத்திலிருந்து ஹூப்ளிக்கு திங்கள்கிழமை தோறும் இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவையானது ஜூன் 8-ஆம் தேதி முதல் ஜூன் 29-ஆம் தேதி வரை 4 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.