அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே அசாவீரன்குடிக்காட்டு கிராமத்திலுள்ள அரசுப் பள்ளியில் திருவள்ளுவர் ஞான மன்றம் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது
தொடக்க விழாவுக்கு சமூக ஆர்வலர் சோழன்குடிக்காடு கணேசன் தலைமை வகித்தார். ஆசிரியர்கள் வீரமணி, செல்வராசு, ராஜமோகன், சமூக ஆர்வலர் அயன்தத்தனூர் நீலமேகம், பூமுடையான் குடிக்காடு முத்து, பரமசிவம், கோடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருவள்ளுவர் மன்ற மாநில ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்,நிர்வாகி கொளஞ்சிநாதன் ஆகியோர் பங்கேற்று,மன்ற பெயர் பலகையை திறந்து வைத்து,திருக்குறளின் சிறப்புகளை எடுத்துரைத்தனர். சோழன்குடிக்காடு அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் தங்க.சிவமூர்த்தி திருவள்ளுவரைப் பற்றி பேசினார். விழாவில், திருவள்ளுவரின் புகழை அனைத்து மக்களிடமும் எடுத்துரைப்பது என அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.முடிவில் ஆசிரியர் அழகு செல்வராசு நன்றி தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.