இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 133 ஆம் ஆண்டு தொடக்க விழா

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 133 ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, அரியலூர் மாவட்டத்தில் அக்கட்சியினர் வியாழக்கிழமை பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.
Updated on
1 min read

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 133 ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, அரியலூர் மாவட்டத்தில் அக்கட்சியினர் வியாழக்கிழமை பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.
விழாவையொட்டி, கயர்லாபாத் கிராமத்தில் வட்டார காங்கிரஸ் துணைத் தலைவர் ரெங்கராஜன் மரக்கன்றுகளை நட்டார். பின்னர் அவர் அங்கு அக்கட்சிக் கொடியை ஏற்றி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். வட்டாரத் தலைவர் கர்ணன், அக்கட்சியின் மாவட்ட செய்தி தொடர்பாளர் மா.மு.சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர். முன்னதாக அரியலூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் த.கலைச்செல்வன் வரவேற்றார். அரியலூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள காமராஜர் சிலைக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி சீனி.பாலகிருஷ்ணன்,நிர்வாகி எஸ்.எம்.சந்திரசேகர் உள்ளிட்டோர் மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். இதேபோல் ஜயங்கொண்டம்,திருமானூர்,செந்துறை, மீன்சுருட்டி, தா.பழூர் உள்ளிட்ட பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர், கட்சிக்கொடியை ஏற்றி வைத்து கொண்டாடினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com