இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

ஆசிரியர்களுக்கு கலந்துரையாடல் பயிற்சி

அரியலூர் வட்டார வள மையத்தில், அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தின் கீழ் அனைத்து நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்துரையாடல் பயிற்சி செவ்வாய், புதன்கிழமை நடைபெற்றன.

News image
Updated On :16 நவம்பர் 2017, 12:25 am

DIN

அரியலூர் வட்டார வள மையத்தில், அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தின் கீழ் அனைத்து நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்துரையாடல் பயிற்சி செவ்வாய், புதன்கிழமை நடைபெற்றன.
வட்டார மேற்பார்வையாளர் மேகநாதன் பயிற்சியை தொடங்கி வைத்து, அதன் நோக்கம், உரையாடல் மூலம் மாணவர்களுக்கு பாடங்களை எவ்வாறு புரிய வைப்பது என்பது குறித்து பேசினார். இதைத்தொடர்ந்து, "கற்றல் விளைவுகள்' என்ற தலைப்பில் சமூக அறிவியல் பாடங்களில் இருந்து கலந்துரையாடல் பயிற்சி அளிக்கப்பட்டது. மாவட்ட கல்வி அலுவலர் கலைமதி, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அனந்த நாராயணன் மற்றும் மாவட்ட பள்ளி ஆய்வாளர் பழனிசாமி ஆகியோர் பார்வையிட்டனர்.
 இதற்கான ஏற்பாடுகளை பயிற்றுநர்கள் கண்ணகி, அமராவதி, ஆசிரியர்கள் மோகனா, சபிதா, மரிய செல்வம், மீனா, சக்கரவர்த்தி ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.