47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பெரியதிருகோணத்தில் டெங்கு விழிப்புணர்வு பேரணி

அரியலூர் மாவட்டம், பெரியதிருகோணம் அரசு மேல்நிலைப் பள்ளி, நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்கள் வியாழக்கிழமை டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி சென்றனர்.

News image
Updated On :12 அக்டோபர் 2017, 9:59 pm

DIN

அரியலூர் மாவட்டம், பெரியதிருகோணம் அரசு மேல்நிலைப் பள்ளி, நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்கள் வியாழக்கிழமை டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி சென்றனர்.
பேரணியை பள்ளியின் தலைமை ஆசிரியர் எஸ்.பி. தமிழ்ச்செல்வன் தொடங்கி வைத்து பேசினார். நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் அ. சுதாகர் முன்னிலை வகித்தார். பேரணியானது பெரியதிருக்கோணம் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று பள்ளியை வந்தடைந்தது. பேரணியில் பள்ளி மாணவ,மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
பள்ளகிருஷ்ணாபுரத்தில்...
 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி,பசுமைப் படை மாணவர்கள்,வீடு விடாகச் சென்று டெங்கு குறித்த விழிப்புணர்வு அடங்கிய துண்டுப் பிரசுரங்களையும்,மேலும் தெருக்களில் குவிந்து கிடந்த குப்பைகள்,பிளாஸ்டிக் பைகள்,பாட்டில்கள்,தேங்காய் ஓடுகளை அகற்றும் பணியிலும் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.