ஒப்பில்லாத அம்மன் கோயில் பால்குடத் திருவிழா
அரியலூரில் உள்ள ஒப்பில்லாத அம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


அரியலூரில் உள்ள ஒப்பில்லாத அம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பக்தர்கள் வஞ்சத்து ஓடையில் இருந்து சக்தி கரகம், பால் குடம், பால் காவடி, தீச்சட்டி எடுத்தும், அலகு குத்தியும் கிராமியக் கலை நிகழ்ச்சிகளுடன் வீதிகளில் ஊர்வலமாக வந்து கோயிலை அடைந்தனர். பின்னர் அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. திருவிழாவில், சிலர் அங்கப் பிரதட்ணம் செய்தும், வயிற்றில் மா விளக்கு போட்டும் நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. மாலையில் அம்மனுக்கு சந்தனக் காப்பு அலங்காரம் நடைபெற்றது. 10 மணிக்கு மேல் ஒப்பில்லாத அம்மன் மின் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சியோடு சுவாமி வீதியுலா நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...