திருமழபாடி வைத்தியநாத சுவாமி கோயில் தேரோட்டம்
அரியலூர் மாவட்டம், திருமழபாடி அருகேயுள்ள வைத்தியநாத சுவாமி திருக்கோயிலில் மாசிமகப் பெருவிழாவையொட்டி புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.


அரியலூர் மாவட்டம், திருமழபாடி அருகேயுள்ள வைத்தியநாத சுவாமி திருக்கோயிலில் மாசிமகப் பெருவிழாவையொட்டி புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
சிவத்தலங்களில் மிகவும் பழமை வாய்ந்ததும், சுற்றுலாத் தலங்களில் ஒன்றானதும், நந்தியம்பெருமாள் சுயசாம்பிகை தேவியரும் திருமணம் கொண்டருளியதுமானதுமான திருமழபாடி வைத்தியசுவாமி கோயிலில் மாசிமகப் பெருவிழா கடந்த 20 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் இரவு பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. காலை 10.30 மணிக்கு சுவாமி திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏரளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் அனிதா மற்றும் கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...