ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு! இதுவரை 17,348 பேர் பாதிப்பு!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்வடகிழக்கு பருவமழை: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் விஜய் 2-வது நாளாக ஆலோசனை!புதிய சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை விடுவிக்க மறுப்புகாமராஜர் காலை உணவுத் திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!பொன்னேரியில் மருத்துவமனை ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றவர் சுட்டுப்பிடிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

வெத்தியார்வெட்டு கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம்: பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகேயுள்ள வெத்தியார்வெட்டு கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற

Published On :

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகேயுள்ள வெத்தியார்வெட்டு கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 66 பயனாளிகளுக்கு ரூ.5 லட்சத்து 56 ஆயிரத்து 908 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
முகாமுக்கு ஆட்சியர் மு. விஜயலட்சுமி தலைமை வகித்து, சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு ரூ. 60 ஆயிரத்தில் முதியோர் ஓய்வூதியத் தொகை மற்றும் இதர ஓய்வூதியத்தொகைக்கான ஆணைகளையும், வருவாய்த் துறை சார்பில் 34 பேருக்கு ரூ. 2 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் பட்டா மாற்ற ஆணைகளையும், வேளாண் துறை சார்பில் 10 பேருக்கு ரூ.1 லட்சத்து 66 ஆயிரத்து 908 மதிப்பில் வேளாண் உபகரணங்களும், தோட்டக்கலைத் துறை சார்பில் 6 பேருக்கு ரூ. 90 ஆயிரத்தில் கத்தரி, முந்திரி, பாகல் கன்றுகள், தர்ப்பூசணி, வெண்டைக்கான இடுபொருட்களையும், சுகாதாரத்துறை சார்பில் 14 பேருக்கு பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் என ஆக மொத்தம் 69 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, இதுபோன்ற காம்களை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
மாவட்ட வருவாய் அலுவலர் சே. தனசேகரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் ஜி.கே. லோகேஷ்வரி, சமூகப் பாதுகாப்புத் திட்ட துணை ஆட்சியர் அ. பூங்கோதை, வேளாண் இணை இயக்குநர் உதயகுமார், கால்நடைப் பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் இ. முகமது ஆசிப், தோட்டக் கலைத்துறை துணை இயக்குநர் பி. அன்புராஜன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் வீ.சி. ஹேமசந்த்காந்தி, பொது விநியோகத் திட்ட துணைப் பதிவாளர் கே.கே. செல்வராஜ் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். 
உடையார்பாளையம் கோட்டாட்சியர் வே.ஜோதி வரவேற்றார். ஜயங்கொண்டம் வட்டாட்சியர் குமரய்யா நன்றி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.