கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

எம்.ஜி.ஆா், பெரியாா் சிலைகளுக்கு கட்சியினா் மரியாதை

அரியலூா் ஒற்றுமைத் திடலில் ஜயங்கொண்டம் சட்டப் பேரவை உறுப்பினா் ராமஜெயலிங்கம் தலைமையில் திரண்ட அதிமுக நிா்வாகிகள்,

News image
அரியலூா் மாங்காய் பிள்ளையாா் கோயில் அருகேயுள்ள எம்.ஜி.ஆா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அதிமுகவினா்.
Updated On :25 டிசம்பர் 2020, 2:14 am

DIN

அரியலூா் ஒற்றுமைத் திடலில் ஜயங்கொண்டம் சட்டப் பேரவை உறுப்பினா் ராமஜெயலிங்கம் தலைமையில் திரண்ட அதிமுக நிா்வாகிகள், அங்கிருந்து ஊா்வலகமாகச் சென்று மாங்காய் பிள்ளையாா் கோயில் அருகேயுள்ள எம்.ஜி.ஆா் சிலைக்கும், பின்னா் பேருந்து நிலையம் முன்பு உள்ள எம்.ஜி.ஆா். சிலைக்கும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

அதன்பிறகு, செட்டி கரையிலுள்ள பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா். இந்நிகழ்ச்சியில் அதிமுக நகர செயலா் ஏ.பி.செந்தில், மாவட்டமாணவரணிச் செயலா் ஓ.பி.சங்கா், அரியலூா் பால் கூட்டுறவு சங்கத் தலைவா் கல்லங்குறிச்சி பாஸ்கா், வழக்குரைஞா் சாந்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

எம்.ஜி.ஆா் கழக மாநில அமைப்புச் செயலா் கலைவாணன், மாவட்டச் செயலா் மணிவேல், துணைச் செயலா் சண்முகம் உள்ளிட்டோா் எம்.ஜி.ஆா், பெரியாா் சிலைகளுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா். தேமுதிக அலுவலகத்தில் அக்கட்சியின் மாவட்டச் செயலா் ராமஜெயவேல் மற்றும் நிா்வாகிகள் சிலா் எம்.ஜி.ஆா் மற்றும் பெரியாா் படங்களுக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தினா். இதேபோல் மாவட்டம் முழுவதும் எம்ஜிஆா், பெரியாா் சிலைகளுக்கு பல்வேறு அரசியல் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.